
செவ்வாய் கிழமைக்குள் அந்த வீணாய்போன நீரிணையை திறந்துவிடுங்கள்- இல்லையென்றால் நரகம் தான்-உச்சதொனியில் பேசிய டிரம்ப்
ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரான் அதிகாரிகளுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை ட்ரம்ப் காலக்கெடு விதித்துள்ளார்.
அவ்வாறு செய்யத் தவறினால், ஈரானின் முக்கிய உட்கட்டமைப்புகள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்படும் என அவர் அச்சுறுத்தியுள்ளார்.
தனது எச்சரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், அந்தத் தண்டனை பேரழிவை ஏற்படுத்தும் “செவ்வாய்க்கிழமை நரகமாகும்”என்று ட்ரம்ப் கூறினார்.
“அடுத்த செவ்வாய்க்கிழமை மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் தாக்கப்படும் தினமாக அமையும். நான் கட்டவிழ்த்து விடப்போகும் தாக்குதலுக்கு நிகராக இதுவரை எதுவும் இருந்திருக்காது.”
மேலும், மிகவும் ஆவேசமான தொனியில் அவர் ஈரானிய அதிகாரிகளை “பைத்தியக்கார மூடர்களே ” என சாடியதோடு, “அந்த வீணாய்போன நீரிணையை திறந்துவிடுங்கள், இல்லையெனில் நீங்கள் நரகத்தை அனுபவிப்பீர்கள், உங்கள் கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள் (“Open the……… strait, crazy bastards, or you are going to live in hell. Wait and see. Praise be to Allah,”)என்றும் எச்சரித்துள்ளார்.
சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்த அறிவிப்பு, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதலை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

