
கர படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது
‘போர் தொழில்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கர’.
இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்
கிராமத்து கதைக்களத்தில் ஆக்சன் பாணியில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 30-ந்தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் ‘கர’ படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி ‘கண்ணம்மா என் கண்ணம்மா’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
CATEGORIES Cinema

