டெல்லி – குஜராத் அணிகள் இன்று மோதல்

டெல்லி – குஜராத் அணிகள் இன்று மோதல்

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் ஒரு முறை, எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணியுடன் 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும்.

லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இந்த தொடரில் இன்று (08) டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொள்கிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )