எப்ஸ்டீனுடன் எந்த தொடர்பும் இல்லை – மெலானியா ட்ரம்ப்

எப்ஸ்டீனுடன் எந்த தொடர்பும் இல்லை – மெலானியா ட்ரம்ப்

அமெரிக்க முதல் பெண்மணி மெலானியா ட்ரம்ப், தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் அவரது நெருங்கிய நண்பனான கிஸ்லைன் மேக்ஸ்வெல் ஆகியோருடன் தொடர்பு இருந்ததாக பரவிய குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளார்.

வெள்ளை மாளிகை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எப்ஸ்டீன் தான் டிரம்ப்-க்கு தன்னை அறிமுகப்படுத்தினார் என்ற வதந்திகளும், மெலானியா ட்ரம்புடன் தனிப்பட்ட உறவு இருந்ததாக கூறப்படுவதும் அனைத்தும் ஆதாரமற்றவை என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எப்ஸ்டீன் அல்லது கிஸ்லைன் மேக்ஸ்வெல் ஆகியோருடன் தனக்கு எந்தவொரு உறவும் இருந்ததில்லை,” என்று மெலானியா டிரம்ப் தெளிவாகக் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்றும், அவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், வெள்ளை மாளிகையும் இந்த விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, மெலானியா ட்ரம்பை எப்ஸ்டீனுடன் இணைக்கும் எந்தவொரு தகவலும் தவறானது என தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )