முன்னாள் எம்.பி. பிரேமலால் ஜயசேகர கைது

முன்னாள் எம்.பி. பிரேமலால் ஜயசேகர கைது

சொக்கா மல்லி’ என அழைக்கப்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது, சந்தேகநபர் தனது துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த துப்பாக்கியின் உரிமம் காலாவதியாகியிருந்ததாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நுவரெலியா பொலிஸாரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )