
யாழ்ப்பாணத்தில் போலி உறுதிப்பத்திர மோசடி ; ஒருவர் கைது
வண்ணார்பண்ணை பகுதியில் 161 பரப்பு காணியை போலி உறுதிப்பத்திரம் மூலம் உரிமை மாற்றம் செய்ய உதவியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த காணி தொடர்பாக போலி ஆவணங்களை பயன்படுத்தி உரிமை மாற்றம் செய்யப்பட்டதாக பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதனையடுத்து, கஸ்தூரியார் வீதி பகுதியில் யாழ்ப்பாணம் மாவட்ட நிதி மோசடி பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கை, யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது.
சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

