சீனாவின் மனிதர்களுடன் கூடிய விண்வெளித் திட்டத்திற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்கள் தெரிவு

சீனாவின் மனிதர்களுடன் கூடிய விண்வெளித் திட்டத்திற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்கள் தெரிவு

சீனாவின் மனிதர்களுடன் கூடிய விண்வெளித் திட்டத்திற்காக (Manned Space Programme) பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்கள் வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக சீனாவின் அரசு ஊடகமான CCTV இன்று தெரிவித்துள்ளது.

அவர்கள் இருவரும் பயிற்சிக்காக சீனா செல்வார்கள் என்றும், அவர்களில் ஒருவர் சுமை நிபுணராக விண்வெளிப் பயணத்தில் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த முஹம்மது ஜீஷான் அலி (Muhammad Zeeshan Ali) மற்றும் குர்ரம் தாவூத் (Khurram Daud) ஆகியோரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளனனர்.

இதன் மூலம், சீனாவின் விண்வெளி நிலையத்தில் பயணிக்கும் முதல் வெளிநாட்டு விண்வெளி வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார் என்று CCTV குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )