நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி ; ரணில் விக்ரமசிங்க அறிக்கை

நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி ; ரணில் விக்ரமசிங்க அறிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது உடல்நலக் குறைவு காலத்தில் நலம் விசாரித்து வாழ்த்து தெரிவித்தார் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

“நோய் கண்டறியப்பட்ட உடனேயே, நலம் விசாரித்தும் விரைவில் குணமடைய வாழ்த்தியும் வந்த தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகளின் எண்ணிக்கை அளவிட முடியாததாக இருந்தது.

நாடு முழுவதும் நல்ல ஆரோக்கியத்திற்காக பல்வேறு மதச் சடங்குகளை ஏற்பாடு செய்த உங்கள் முயற்சிகள் எனது சிறப்புப் பாராட்டுக்குரியவை.

ஒரு இலங்கை குடிமகனாக, நான் விரைவில் குணமடைய நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் எனக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கின்றன. குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சி எனக்காக தங்களால் இயன்ற உதவிகளை செய்தது எனக்கு தெரியும்.

மீண்டும், என் மீது நீங்கள் காட்டிய அக்கறைக்கும் கவலைக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )