
உலக சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரிப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களும், விநியோகத் தடைகளும் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் இன்று (29) குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளன.
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்க்கான கேள்வி அதிகரித்து வருவதால், அதன் விலைகளில் தொடர்ச்சியான உயர்வு பதிவாகி வருகிறது.
அதன்படி, உலக சந்தையில் WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100.3 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
மேலும், சர்வதேச அளவில் பரவலாக பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 111.7 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
இதேவேளை, இயற்கை எரிவாயு சந்தையிலும் விலை உயர்வு பதிவாகியுள்ளது. அதன் படி, இயற்கை எரிவாயு விலை 2.559 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
இந்த விலை உயர்வுகள் உலக பொருளாதாரத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

