இடியுடன் மழை ; பல மாகாணங்களுக்கு மின்னல் எச்சரிக்கை

இடியுடன் மழை ; பல மாகாணங்களுக்கு மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (29) இரவு 11.30 மணி வரை மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேல் மாகாணங்களுக்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய அபாயங்களைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )