மே தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம்

மே தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம்

நாளை (மே 01) நடைபெறவுள்ள சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல பகுதிகளில் மே தினப் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக, கொழும்பு நகரத்தை மையமாகக் கொண்டு பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் நடைபெறவுள்ளதால், நகரம் முழுவதும் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

மே தினக் கொண்டாட்டங்கள் அமைதியான சூழலில் நடைபெறுவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு வலுப்படுத்தல், போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலைப் பாதுகாப்பு திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, பொதுமக்களின் இயல்பான போக்குவரத்து ஓட்டம் பாதிக்கப்படாதவாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், வெளி மாகாணங்களில் நடைபெறவுள்ள மே தினப் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் தொடர்பாக தேவையான பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் தலைவர் வழிமுறைகள் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், கொழும்பு நகரில் நடைபெறவுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் தொழில்முறை அமைப்புகளின் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கான இடங்கள் மற்றும் வழித்தடத் திட்டங்கள் தனியாக அறிவிக்கப்படவுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )