
கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 120 அமெரிக்க டொலர்களை தாண்டியது
உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 120 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.
இது 2022 ஜூன் மாதத்திற்குப் பிறகு பதிவான அதிகபட்ச விலையாகக் கருதப்படுகிறது.
ஈரான் மீதான தடைகள்: ஈரான் நாட்டு துறைமுகங்களை முடக்கும் நடவடிக்கை இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அறிவிப்பு இந்த விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகும்.
உலகின் பிரதான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருப்பதால், பிராந்திய மோதல்கள் தீவிரமடையக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
உலக வல்லரசுகளுக்கும் ஈரானுக்கும் இடையிலான இந்த பதற்றமான சூழ்நிலை காரணமாக, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பாரிய தடைகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலைமை உலகப் பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

