இணைய விளையாட்டு அடிமை ; இளைஞர் உயிரிழப்பு

இணைய விளையாட்டு அடிமை ; இளைஞர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இணைய விளையாட்டிற்கு அடிமையாகியிருந்த நிலையில் நேற்று (29) உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த இளைஞர் கணிதப் பிரிவில் கல்வி கற்று வந்தவராகவும், அவருடைய குடும்பத்தில் இவரைத் தவிர மற்றைய உறுப்பினர்கள் அனைவரும் விசேட தேவையுடையவர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று அவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், உடல் மீட்கப்பட்டபோது அவர் வழக்கத்திற்கு மாறான முறையில் ஆடை அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகின்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )