
ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
வத்தளை பொலிஸ் பிரிவின் எல இவுர வீதி பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (06) பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வத்தளைப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த கைது நடவடிக்கையின் போது, 173 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் வத்தளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

