
தேசிய சுற்றாடல் கட்டமைப்பு மீதான மதிப்பீடு நடக்க வேண்டும்
2025 வரவு செலவுத் திட்ட சுற்றாடல் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் இன்று (17) கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் துறையின் முன்னேற்றங்களுக்கு விசேட பல முன்மொழிவுகளை பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
தேசிய சுற்றாடல் கட்டமைப்பு மீதான மதிப்பீடு நடக்க வேண்டும்.
தேசிய சுற்றாடல் கட்டமைப்பு மீதான மதிப்பீடு நடக்க வேண்டும். குடிமக்கள் நமது நாட்டின் சுற்றாடல் கட்டமைப்பின் மூலம் நடக்கும் உயிரியல் பல்வகைமை பெருக்கத்தின் மதிப்பை புரிந்து கொள்ள வேண்டும். அதே போல் சுற்றுச்சூழல் எமக்கு வழங்கும் சேவைகள் மற்றும் அதன் மூலம் மனிதகுலத்தின் இருப்பு பேணப்பட்டு வருகிறது என்பது தொடர்பிலும் மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
பல சந்தர்ப்பங்களில், இந்த சுற்றாடல் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகள் வழங்கப்படவில்லை. நமது நாட்டின் புவியியல் அமைவிடத்திற்கு ஏற்ப பாதுகாப்பு இலக்குகளை உருவாக்கி முன்னேற வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் பசுமை அரசியல் கட்சியும் கூட்டணியுமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எமது சுற்றாடல் திட்ட சாசனம் குறித்தும் அவதானம் செலுத்துங்கள்.
இலங்கையைப் பார்க்கும்போது, உயர் பல்லுயிர் பெருக்கம் அடர்த்தியாக காணப்படும் ஓர் நாடாகவும், இயற்கையான சுற்றாடல் கட்டமைப்பில் நிலையான திட்டங்களை முன்னெடுக்கக் கூடிய ஓர் நாடு என்றும் இலங்கையை அழைக்கலாம்.
2024 கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் முன்வைக்கப்பட்ட எமது சுற்றாடல் திட்டம் மற்றும் சுற்றாடல் சாசனம் என்பனவற்றை இன்று மீண்டும் சபைக்கு சமர்ப்பிக்கின்றேன். காட்டு யானைகள், புலிகள் மற்றும் திமிங்கில வளங்களை மையப்படுத்தி 3 விசேட தேசிய திட்டங்களை இதில் முன்வைத்துள்ளோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தேசிய நில பயன்பாட்டுத் திட்டமும், தேசிய பௌதீக வள திட்டமும் நமது நாட்டுக்கு அவசியமாகும்.
நமது நாட்டின் சுற்றாடலை வலுப்படுத்தவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் தேசிய நில பயன்பாட்டுத் திட்டமும், தேசிய பௌதீக வளத் திட்டமும் எமக்கு தேவையாக காணப்படுகின்றன. இந்த விடயத்தில் பரந்த இணக்கப்பாடு தேவை. பல்லுயிர் வளங்களை பாதுகாக்க பல்லுயிர் மதிப்பைப் பாராட்ட வேண்டும்.
சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைத்தல், பிளாஸ்டிக் பாவனையால் ஏற்படும் கழிவுகளைக் குறைத்தல், மண் அரிப்பைக் குறைத்தல், அனுமதியின்றி காடுகளை அழிப்பதைத் தடுத்தல் போன்றவற்றுக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
சுற்றாடல் பாதுகாப்புக்கு சமூகத்தை மையமாகக் கொண்ட பாதுகாப்பு ஒழுங்குகளும் இன்றியமையாததாகும்.
ஒரு வட்டப் பொருளாதாரத்தை நோக்கிச் செல்லும் போது, நிலைபேறான சுற்றாடல் மற்றும் உயிர்பல்வகைமை அபிவிருத்திக்கு சமூகத்தை மையமாகக் கொண்ட பாதுகாப்பும் மிகவும் முக்கியமானவையாகும்.
வனஜீவராசிகள் பாதுகாப்பு சமூகம் சார்ந்த முறையில் திட்டமிடப்பட்டால், அது வெற்றியளிக்கும். வனஜீவராசிகள் பாதுகாப்புத் திட்டங்கள் பெரும்பாலும் தனி நபர்களை மையமாகக் கொண்ட பாதுகாப்புத் திட்டங்களாக அமையும் பட்சத்தில் உயிர்பல்வகைமையை பாதுகாக்கலாம்.
இன்றளவில் நாம் பல சுற்றாடல் சாசனங்களை ஏற்றுக் கொண்டுள்ளோம். காலத்துக்கு காலம் பல்வேறு சாசனங்களுக்கு இணக்கப்பாடுகளை தெரிவித்துள்ளோம். என்றாலும் ஒரு நாடு என்ற வகையில் இந்த இலக்குகள் பூர்த்தி செய்யப்பட்டதா என்பதில் பிரச்சினை காணப்படுகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பசுமை சுற்றுலாவை வளர்ப்போம்!
பசுமை சுற்றுலாத் தொழில் என்ற கருத்திட்டத்தின் கீழ் நமது நாடு அன்னியச் செலாவணியை ஈட்ட முடியும். 1971 அல்லது 72 இல், இந்தியாவின் திருமதி இந்திரா காந்தி வேட்டையாடப்படும் புலிகளை மையமாகக் கொண்ட திட்டத்தின் மூலம் புலிகளை மையமாகக் கொண்ட சுற்றுலாத் தொழிலை முன்னெடுத்தார்.
இதன் காரணமாக, புலிகள் அதிகரித்து, பெரும் பசுமை சுற்றுலாத் தொழில் அங்கு ஊக்குவிக்கப்பட்டுள்ளது. காட்டு யானைகள், புலிகள், மற்றும் டொல்பின்களைப் பயன்படுத்தி பசுமைச் சுற்றுலாவை எம்மால் முன்னெடுக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
யானை-மனித மோதலுக்கு நிலையான தீர்வுகளை வழங்குவோம்!
காட்டு யானை- மனி மோதல், வனவிலங்குகள்-மனித மோதல்கள் தீவிரமடைந்துள்ளதுள்ளன. இவற்றுக்கு தீர்வு காண முயற்சித்த போதிலும் வெற்றியளிக்கவில்லை. உலகில் வனவிலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதல்களை வெற்றிகரமாகக் குறைத்த புதிய தொழில்நுட்பங்கள் காணப்படுகின்றன. நம் நாட்டில் வனவிலங்கு பாதுகாப்பு திட்டத்தை முன்னெடுப்பது கடினமாக காணப்படுகின்றது.
வனஜீவராசிகள் பாதுகாப்பு பொறிமுறையை வலுப்படுத்தத் தேவையான மனித மற்றும் பௌதீக வளங்கள் திட்டமேதும் இங்கு முன்னெடுக்கப்பட்டதாக இல்லை. இதன் காரணமாக இந்த முரண்பாடுகளை தடுப்பதற்கு எமது நாட்டில் தெளிவான வேலைத்திட்டமொன்று இல்லை.
மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களும், அமைச்சருக்கு அமைச்சரும் இந்த திட்டங்கள் வேறுபடுபவனவாக அமைந்து காணப்படுகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
விலங்குகளின் நலனுக்கு முன்னுரிமை வழங்குங்கள்.
வனஜீவராசிகளின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மனிதநேயத்தின் அடிப்படையில் சர்வதேச மாநாடுகளில் பங்கேற்பது போலவே, நமது நாட்டின் நிலைபேறான சுற்றாடலுக்கு சிறந்த நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
புதிய பசுமைத் திட்ட போக்குகள் காரணமாக நம் நாட்டிற்குக் கிடைக்கும் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழலை மையமாகக் கொண்ட பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துவதற்கும் ஒரு சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகமொன்று இங்கு தாபிக்கப்பட வேண்டும்.
மேலும், நமது நாட்டை சர்வதேச கேந்திர மையமாக உருவாக்கி, தேசிய பூங்காக்களை மையமாக வைத்து சர்வதேச ஆராய்ச்சிகளை நடத்தக் கூடிய உயர்ந்த வாய்ப்பை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
வனஜீவிகள் துறையில் பௌதீக மற்றும் மனித வளங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுற்றாடல் துறையில் பல வருட அனுபவம் உள்ள தன்னார்வப் பணியில் ஈடுபட்டு, சொற்ப சம்பளம் பெறும் வனஜீவராசிகள் துறை அதிகாரிகளுக்கு நிரந்த நியமணங்களை பெற்றுக் கொடுங்கள்.
பல்நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தில் இருந்து ரூ. 22500 பெறும் ஆயிரக்கணக்கானோர் காணப்படுகின்றனர். இவர்களின் தொழிலை நி்ரந்தரமாக்குங்கள். வன விலங்குகள் கணக்கெடுப்பை முறையாக மேற்கொள்ள வேண்டும்.
சரியான விஞ்ஞான பூர்வ முறைமைகள் இங்கு கையாளப்படாமையினால் இதனை பலரும் பல்வேறு விதமாக கேலி செய்வது வருகின்றனர். இவ்வாறு கேலி செய்வது ஏற்புடையதல்ல என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.