தேர்தல் சட்டங்களை மீறிய 33 வேட்பாளர்கள் கைது

தேர்தல் சட்டங்களை மீறிய 33 வேட்பாளர்கள் கைது

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில், 33 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. 

கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதியிலிருந்து இன்று (30) காலை வரையான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம், குறித்த காலப்பகுதியில் கட்சிகளின் ஆதரவாளர்கள் 349 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, வவுனியா – பூந்தோட்டம் பகுதி மக்களுக்கு வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவரின் மூலம் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அஞ்சல் பணியாளர் ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

அத்துடன், குறித்த வர்த்தக நிலைய உரிமையாளரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )