
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஐ.தே.க மாநகர சபை உறுப்பினரை எதிர்கட்சித் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டார்
தாக்குதலுக்கு ஆளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக கொழும்பு மாநகர சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி உலுவடுகே சந்தமாலி அவர்களைப் பார்வையிட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (18) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.
கடந்த திங்கட்கிழமை (16) கொழும்பு மாநகர சபையின் மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான கன்னி அமர்வில் கலந்து கொண்டதன் பிற்பாடு தனது வீட்டிற்குச் செல்லும் வழியில் அடையாளம் தெரியாத கும்பலால் இவர் தாக்கப்பட்டார்.
தாக்குதலில் காயமடைந்த கொழும்பு மாநகர சபை உறுப்பினர் திருமதி உலுவடுகே சந்தமாலி அவர்கள் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

