மலையக ரயில் சேவை பாதிப்பு

மலையக ரயில் சேவை பாதிப்பு

கொழும்பில் இருந்து பதுளை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக மலையக போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இதனால் கொழும்பில் இருந்து பதுளை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் இவ்வாறு நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )