
21ஆம் திகதி பேரணியில் பங்கேற்பதாக மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பு
இம்மாதம் 21ஆம் திகதி ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்களணிப் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்க உள்ளதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தனது பிறந்தநாள் முன்னிட்டு கண்டி தலதா மாளிகையில் வணக்கத்திற்காக மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட வேண்டிய அவசியம் இருப்பதாகவும், அதனாலேயே தாம் பேரணியில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதற்கிடையில், முன்பு இந்த பேரணியில் மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கமாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

