
தங்காலை துப்பாக்கிச் சூடு ; தம்பதியினர் பலி
தங்காலை – உனாக்குருவ பகுதியில் நேற்று (18) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
9 மி.மீ ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்கள் 68 மற்றும் 59 வயதுகளையுடைய தம்பதியினர் என தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

