
கடந்த 5 மாதங்களில் 2 தொன் போதைப்பொருள் பறிமுதல்
கடந்த 5 மாதங்களில் சுமார் 2 தொன் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்குபற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இதுவரையான காலப்பகுதியில் 1,253 கிலோகிராம் ஹெராயினும் 2,121 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும் 12,439 கிலோகிராம் கஞ்சாவும் 22 கிலோகிராம் கொக்கேய்ன்னும் 1.6 மில்லியன் போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
CATEGORIES Sri Lanka

