
உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் ; 9 பேர் பலி
உக்ரேன் தலைநகர் கீவ் மீது நேற்றிரவு முதல் ரஷ்யா டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
குடியிருப்பு கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், இடிபாடுகளில் மக்கள் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. இதனால் மீட்புப்படையினர் மற்றும் தீயணைப்புப்படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை கீவ் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல் நடத்தியது. இதில் 28 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 4 வருடமாக நடைபெற்று வரும் போரில் இது மிகவும் கொடூரமான தாக்குதல் என உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.
கீவ் மீது கடுமையான தாக்குதல் நடத்தி ஒருவாரம் கூட முடியவடையாக நிலையில், தற்போது புதிய தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES World News

