
யாழில் வயலுக்குள் பாய்ந்த தனியார் பஸ்
யாழில் இருந்து பயணிகளை ஏற்றியவாறு சித்தங்கேணி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் 789 வழித்தட பஸ் ஒன்று வயலுக்குள் நேற்று (17) பாய்ந்து விபத்துக்குள்ளானது.
குறித்த பஸ் அண்ணளவாக 10-15 kmh வேகத்தில் சென்றுகொண்டிருந்தவேளை வலது புறமாக வீதிக்கு மாறி மெதுவாக சென்று வயலில் விழுந்தது. இருப்பினும் பயணிகள் எவருக்கும் எந்தவிதமான உயிராபத்தும் ஏற்படவில்லை.
குறித்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

