சுற்றுலா விசாவில் வந்து ஒன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 11 இந்திய பிரஜைகள் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

சுற்றுலா விசாவில் வந்து ஒன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 11 இந்திய பிரஜைகள் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

ஒன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய பிரஜைகள் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து ஒன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 11 சந்தேக நபர்களையும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கடுவெல நீதவான் பண்டார இளங்கசிங்க உத்தரவிட்டார்.

பெலவத்த அகுரேகொட பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இருந்து இந்தக் குழுவினர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், தலங்கம பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டைச் சுற்றி வளைத்து மூன்று பெண் சந்தேக நபர்களையும் எட்டு ஆண் சந்தேக நபர்களையும் போலீசார் கைது செய்தனர் .

சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை வெலிசர தடுப்பு காவலில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )