யாழில் நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ; ஒருவர் பலி

யாழில் நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ; ஒருவர் பலி

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் நேற்று (10) இரவு இடம்பெற்ற விபத்தில் நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் 35 வயதான ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

May be an image of 4 people and car

கிளிநொச்சிப் பகுதியில் இருந்து யாழ் நோக்கி வருகை தந்த காரும் – யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த டிப்பர்,கூலர் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன ஒன்றோடு ஒன்று மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

May be an image of 6 people, ambulance and car

இந்த விபத்தில் படுகாயமடைந்த மூவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )