
பேராதனை – கண்டி ரயில் சேவைகள் செப்டம்பர் 5 முதல் 7 ஆம் திகதி வரை இயக்கப்படமாட்டாது
ரயில் கடவையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பேராதனைக்கும் கண்டிக்கும் இடையிலான மலையக ரயில் சேவைகள் செப்டம்பர் 5 முதல் 7 ஆம் திகதி வரை கட்டுப்படுத்தப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த மூன்று நாட்களில் பேராதனைக்கும் கண்டிக்கும் இடையில் டிக்கிரி மெனிகே மற்றும் உடரட்ட மெனிகே ரயில்கள் இயக்கப்படாது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
டிக்கிரி மெனிகே ரயில் நானுஓயாவிலிருந்து பேராதனை வழியாக கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படும், அதே வேளை உடரட்ட மெனிகே ரயில் கொழும்பு கோட்டையிலிருந்து பேராதனை வழியாக பதுளைக்கு இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ரயில்களில் பயணிப்பதை எளிதாக்கும் வகையில், கண்டி ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் பேராதனை வரை பஸ்களில் பயணிக்க தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

