
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவை செப்டெம்பர் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் இன்று (08) உத்தரவிட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் பிரசன்ன ரணவீரவை கைது செய்யுமாறு நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர நீதிமன்றில் சரணடையாமல் நீண்ட காலமாக தலைமறைவாக இருந்தார்.
பின்னர், முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர கடந்த மே மாதம் 07 ஆம் திகதி நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

