
உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் மீது விதித்த வரியால் அதன் நன்மைகள் இறக்குமதியாளர்களுக்கே சென்றன
உள்நாட்டு விவசாயிகளை பாதுகாப்பதற்கும், விலை போட்டி தன்மை மூலம் விவசாயிகளுக்கு பாதுகாப்பைப் பெற்றுக் கொடுத்து, வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தினாலும், இதன் விளைவாக, உள்நாட்டு உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காய செய்கைகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் போலவே நுகர்வோரும் உண்மையிலேயே பாதுகாக்கப்படுகின்றனரா என்ற பிரச்சினை காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நமது நாட்டில் 20,000 உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யும் விவசாயிகளும், பெரிய வெங்காயத்தை உற்பத்தி செய்யும் விவசாயிகள் சுமார் 7,000 பேரளவிலும் காணப்படுகின்றனர்.
இந்த செயல்முறையின் மூலம், ஒரு கிலோ உருளைக்கிழங்கிற்கான வரி ரூ.60 லிருந்து ரூ.80 ஆகவும், ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கான வரி ரூ.10 இல் இருந்து ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
இங்கு பிரச்சினை என்னவென்றால், உள்நாட்டு உருளைக்கிழங்கு விவசாயிகளின் உற்பத்திகள் மீதான மொத்த விலை ரூ. 160 லிருந்து ரூ. 220 ஆக அதிகரிக்கப்பட்டாலும், ரூ. 160க்கே கொள்வனவு செய்யப்படுகின்றன.
ஒரு கிலோ உருளைக்கிழங்கு உற்பத்திக்கு ரூ. 210 செலவாகின்றமையால், உற்பத்தி விலைக்கும், உள்நாட்டு விவசாயியிடமிருந்து கொள்வனவு செய்யும் விலைக்கும் இடையே வித்தியாசம் காணப்படுகின்றன.
எனவே, இந்த வரி விதிப்பதன் மூலம் எதிர்பார்த்த நோக்கங்கள் அடையப்படுகின்றனவா என்ற பிரச்சினையும் காணப்பட்டு வருகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு சுட்டிக்காட்டினார்.

