மட்டக்களப்பில் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் அதிபர்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்பிரதமர் ஹரிணி மட்டக்களப்பு விஜயம்

மட்டக்களப்பில் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் அதிபர்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்பிரதமர் ஹரிணி மட்டக்களப்பு விஜயம்

மட்டக்களப்பில் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு காந்திபூங்காவிற்கு முன்னால் இன்று சனிக்கிழமை ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தேசிய அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இன்றையதினம் பிரதமர் ஹரிணி அமரசூரிய மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ளும் நிலையில், இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

”28 ஆண்டுகளாக அமைதியாகக் காத்திருக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு 2026 வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து வாக்குறுதியளிக்கப்பட்ட சம்பளப் பரிந்துரைகளை வழங்குதல்” என்ற தலைப்பில், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தேசிய அமைப்பின் செயலாளர் அனில் புஷ்ப குமார மற்றும் அமைப்பாளர் பண்டார தலைமையில்,இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )