
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே சக்திவாய்ந்த வெடிப்பு10 உயிரிழப்பு 24 பேர் வைத்திசாலையில் அனுமதி
டெல்லி செங்கோட்டை அருகேயுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் கேட் எண் 1 அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 10 உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. .
இந்த சபாவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 24 பேரில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கார் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தையடுத்து ஏற்பட்ட தீ, ஏனைய வாகனங்களுக்கும் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிப்பைத் தொடர்ந்து இந்திய தலைநகர் முழுவதும் காவல்துறை உடனடியாக உயர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி தீயணைப்பு சேவைகள் மற்றும் காவல்துறை தற்போது சம்பவ இடத்தில் பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன .
இந்த வெடிப்பு பவம் மக்கள் நடமாட்டம் மிகுந்த ரு பரபரப்பான பகுதியில் ஏற்ப்பட்டுள்ளதாகவும் ,வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

