கம்பளையில் காதல் விவகாரத்தில் 16வயது சிறுமி கொலை

கம்பளையில் காதல் விவகாரத்தில் 16வயது சிறுமி கொலை

கம்பளை பொலிஸ் பிரிவின் மில்லகஹமுல, பன்விலதென்ன பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

நேற்று இரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் மில்லகஹமுல்ல, பன்விலதென்ன பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவர் என்று கம்பளை போலிஸார் தெரிவித்துள்ளனர்.

காதல் விவகாரம் தொடர்பான தகராறில் இந்தக் கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதுடன் அவரைக் கைது செய்ய கம்பளை போலிஸார்ர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் இடமபெற்ற இடத்தில் சடலம் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளது எனவும் நீதவான் விசாரணைக்குப் பிறகு பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும் கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )