ஹொங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரிப்பு                                    279 பேர் காணாமல் போயுள்ளனர்                                  பலர் காயம்

ஹொங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரிப்பு 279 பேர் காணாமல் போயுள்ளனர் பலர் காயம்

ஹொங்காங்கின் தாய் போ மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

இந்த தீ விபத்தில் மேலும் 279 பேர் காணாமல் போயுள்ளதாகவும்
29 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் , ஏழு பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் ஒரு தீயணைப்பு பணியாளரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயை அணைக்க சுமார் 800 தீயணைப்பு பணியாளர்களும் 128 தீயணைப்பு வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டன

ஹொங்காங்கின் வட பிராதியம் , தை போவில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு ( Wang Fuk Court residential complex) வளாகத்தில் , 31 மாடிகளைக் கொண்ட 8 கட்டடங்கள் உள்ளன, இவற்றில் உள்ள 2000 குடியிருப்புக்களில் சுமார் 4,800 பேர் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணத்தை விசாரிக்க பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன..

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )