கண்டி மாவட்டத்தில் 30,000 குடும்பங்களுக்கு வீடுகளை சுத்தம் செய்வதற்காக வழங்கப்படும் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது

கண்டி மாவட்டத்தில் 30,000 குடும்பங்களுக்கு வீடுகளை சுத்தம் செய்வதற்காக வழங்கப்படும் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது

அனர்த்தத்தால் சேதமடைந்த வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் ரூ.25,000 கொடுப்பனவு, கண்டி மாவட்டத்தில் 30,000 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்தார்.

கிராம அலுவலர்கள் பிரதேச செயலகங்களுடன் இணைந்து சம்பந்தப்பட்ட தொகையை விநியோகிப்பார்கள், மேலும் வாழ்வாதாரத்திற்காக ரூ.25,000 – 50,000 தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

சேதமடைந்த வீடுகளில் சமையலறை உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.50,000 தொகை வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ரூ.15,000 மற்றும் ரூ.10,000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்தெரிவித்தார்.

கண்டி மாவட்ட ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )