850 கிலோ கிராம் சுறா மீன் இறைச்சியுடன் ஆறு மீனவர்கள் கைது

850 கிலோ கிராம் சுறா மீன் இறைச்சியுடன் ஆறு மீனவர்கள் கைது

இலங்கை கடலோர காவல்படையினர் இன்று (06) நடத்திய விசேட சோதனை நடவடிக்கையில், 850 கிலோவுக்கும் அதிகமான சட்டவிரோத சுறா மீன் இறைச்சியுடன் ஆறு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வென்னப்புவயில் உள்ள வெல்லமங்கர மீன்பிடித் துறைமுகத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போதே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சுறா மீன் இறைச்சி மற்றும் மீன்பிடி உபகரணங்கள் போன்றன மேலதிக விசாரணைகளுக்காக வெல்லமங்கரயில் உள்ள மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )