இலங்கை – இங்கிலாந்து முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று

இலங்கை – இங்கிலாந்து முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (22) நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகும்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மூன்று போட்டிகளை கொண்டதாகும்.

ஒருநாள் தொடரின் பின்னர், இரு அணிகளுக்கும் இடையில் மூன்று போட்டிகளை கொண்ட டி20 (20/20) கிரிக்கெட் தொடர் நடத்தப்படவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )