
கத்தோலிக்க பாதிரியார் தாக்குதல் ; 3 பொலிஸார் அடையாளம்
கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில், மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று (29) கம்பஹா நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பிற்கு முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, சம்பவத்துடன் தொடர்புடையதாக மூன்று பேர் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
CATEGORIES Sri Lanka

