இன்றும் நாளையும் கொழும்பு கோட்டை – வெள்ளவத்தைக்கு இடையிலான ரயில் சேவைகள் 15 நிமிடங்கள் தாமதமாகும்

இன்றும் நாளையும் கொழும்பு கோட்டை – வெள்ளவத்தைக்கு இடையிலான ரயில் சேவைகள் 15 நிமிடங்கள் தாமதமாகும்

இன்றும் நாளையும் கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தாமதமாகக் கூடும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த ரயில் நிலையங்களுக்கிடையிலான ரயில் பாதைகளில் இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, சமிக்ஞை கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப் பணிகள் காரணமாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இரு நாட்களிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் கரையோர ரயில் பாதையில் பயணிக்கும் ரயில்கள் சுமார் 15 நிமிடங்கள் வரை தாமதமாகக்கூடும் என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )