
323 கொள்கலன்கள் விவகாரம் ; பாராளுமன்றத் தேர்வுக்குழுவில் அமைச்சர் உபாலி பன்னிலகே நியமனம்
323 கொள்கலன்களை உரிய பௌதீக ஆய்வு இல்லாமல் விடுவித்தமை குறித்து விசாரணை நடத்தும் பாராளுமன்றத் தேர்வுக் குழுவின் உறுப்பினராக அமைச்சர் உபாலி பன்னிலகே நியமிக்கப்பட்டுள்ளார்.
நிலையியற் கட்டளை 106 இன் விதிகளின்படி இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சபாநாயகர் இன்று (18) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
கொழும்பு துறைமுகம் இருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீக பரிசோதனை இல்லாமல் விடுவித்தது தொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கும், அதனுடன் தொடர்புடைய பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளை வழங்குவதற்கும் இந்தத் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் இருந்த அனுர கருணாதிலகே பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில், கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக உள்ள உபாலி பன்னிலகே நியமிக்கப்பட்டுள்ளார்.

