
ஐசிசி T 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் : இத்தாலியை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி
ஐசிசி T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 37ஆவது போட்டியில்
மேற்கிந்திய தீவுகள் அணி இத்தாலி அணியை 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
இன்றைய தினம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இத்தாலி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை பதிவுசெய்தது
துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஷாய் ஹோப் (Shai Hope) 46 பந்துகளில் 75 ஓட்டங்களை பதிவுசெய்தார்.
பந்துவீச்சில் இத்தாலி அணி சார்பில் கிரிஷான் கலுகமகே (Crishan Kalugamage) மற்றும் பெஞ்சமின் மானெண்டி (Benjamin Manenti) ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தொடர்ந்து 166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி 18 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களை பதிவு செய்துள்ளது.
இத்தாலி அணி சார்பில் அதிகபட்சமாக பெஞ்சமின் மானெண்டி (Benjamin Manenti) 26 ஓட்டங்களையும்
ஜேஜே ஸ்மட்ஸ் (JJ Smuts) 24 ஓட்டங்களையும் பதிவுசெய்தனர்.
பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஷமர் ஜோசப் (Shamar Joseph) 4 விக்கெட்டுகளையும் மேத்யூ ஃபோர்டு (Matthew Forde)விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

