முன்னாள் MP சந்தன கத்ரியாராச்சிவீட்டில் துப்பாக்கி மகஸின்கள் – தோட்டாக்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் CID யால் கைது

முன்னாள் MP சந்தன கத்ரியாராச்சிவீட்டில் துப்பாக்கி மகஸின்கள் – தோட்டாக்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் CID யால் கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெஸ்பேவ நீதவான் நீதிமன்றினால் பெறப்பட்ட சோதனை பிடியாணையின் அடிப்படையில் அவரது வீட்டைச் சோதனையிட்டபோது, அங்கிருந்து இரண்டு டி-56 துப்பாக்கி மெகசின்கள், 221-க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மற்றும் இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )