
அமரகீர்த்தி அத்துகோரல் கொலை வழக்கு ; பாதுகாப்பு உத்தியோகத்தர் குடும்பம் மேன்முறையீடு செய்யவுள்ளதாக அறிவிப்பு
பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல் மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் கொலை வழக்கில் தீர்ப்புக்கு எதிராக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக இன்று (23) ஜனாதிபதி பணிப்பாளர் நாயகரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் மனைவி, உயர்நீதிமன்றத்திடமிருந்து நியாயமான தீர்ப்பை எதிர்பார்க்கின்றனர் என தெரிவித்தார்.
மேலும் , “நாங்கள் ஜனாதிபதியை சந்தித்து எமக்கு ஏற்பட்ட அநீதி குறித்து எழுத்துமூலமாக கடிதம் வழங்கினோம். அதேசமயம், மேன்முறையீடு ஒன்றையும் சமர்ப்பிக்க உள்ளோம். ஐந்து பேர் கொண்ட நீதியரசர் குழாமிடமிருந்து உண்மையான நியாய தீர்ப்பை எதிர்பார்க்கிறோம்” என்று அவர் கூறினார்.
மேலும், “மூவரடங்கிய மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொண்டாலும், ஒரு நீதிபதி குற்றமற்றவர்களாக சிலரை விடுவித்தார். அதனால், இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்த 12 பேரையும் விடுவிப்பதே எமது ஒரே எதிர்பார்ப்பு” என குறிப்பிட்டுள்ளார்.

