வெலிகம துப்பாக்கிச் சூடு ; முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது

வெலிகம துப்பாக்கிச் சூடு ; முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது

2023 ஆம் ஆண்டு W15 வெலிகம ஹோட்டலுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்த கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்திற்குப் பிறகு அவர் வெளிநாடு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், நேற்று (23) மீண்டும் நாட்டிற்கு திரும்பிய வேளையில், விமான நிலைய அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

2023 ஆம் ஆண்டு வெலிகம பகுதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்து விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் கூறினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )