
போதைப்பொருளுடன் இருவர் கைது
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருட்களை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சந்தேக நபர்களிடம் இருந்து 630 போதை மாத்திரைகளும், 5 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைதான ஆண் மற்றும் பெண் சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதீபன்
CATEGORIES Sri Lanka

