போர்ப் பதற்றம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் தொடருமாக இருந்தால் நாம் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்

போர்ப் பதற்றம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் தொடருமாக இருந்தால் நாம் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தொனிப்பொருளின் கீழ், யாழ். மாவட்டத்தில் 117.04 மில்லியன் ரூபா செலவில் காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகள் நேற்று (15) உத்தியோகபூர்வமாக தொடங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்னாயக்க, உலகளாவிய போர்ப் பதற்றம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் தொடர்ந்தால் அது உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார்.

அவரின் உரையில், வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சில நிர்வாகச் சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் பகுதிகளிலிருந்து மக்கள் பெருமளவில் வெளியேறியதால் அப்பிரதேசங்கள் சோபையிழந்து காணப்படுகின்றன; தற்போது நடைபெறும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் மூலம் அப்பகுதி மக்கள் மீண்டும் தமது சொந்த பிரதேசங்களில் குடியமர முடியும் என அவர் தெரிவித்தார்.

மேலும், உலகளாவிய போர்ப் பதற்றத்தினால் சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் எரிபொருள் நெருக்கடி ஏற்படலாம் என்பதால், ‘கியூ.ஆர்’ முறைமை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.என தெரிவித்தார்.

பிரதீபன்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )