ஹார்முஸ் நீரிணையை 48 மணி நேரத்திற்குள் திறக்காவிட்டால்         ஈரானின் அனைத்து மின் நிலையங்களும் அழிக்கப்படும்                    -ட்ரம்ப் எச்சரிக்கை

ஹார்முஸ் நீரிணையை 48 மணி நேரத்திற்குள் திறக்காவிட்டால் ஈரானின் அனைத்து மின் நிலையங்களும் அழிக்கப்படும் -ட்ரம்ப் எச்சரிக்கை

ஹார்முஸ் நீரிணையைஅடுத்த 48 மணி நேரத்திற்குள் திறக்கத் தவறினால், ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் அழிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனது Truth Social சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, ஹார்முஸ் நீரிணையைத் திறப்பதற்கு, ஈரானுக்கு நேற்றிரவு முதல் 24 மணிநேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா (Diego Garcia) இராணுவத் தளத்தை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதைத் தொடர்ந்து, “பொறுப்பற்ற தாக்குதல்களை” என குறிப்பிட்ட பிரித்தானியா தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளது.

இந்தத் தாக்குதல் முயற்சி, ஈரானின் இராணுவ வலிமை மற்றும் அதன் ஏவுகணைகள் எவ்வளவு தூரம் வரை பாயக்கூடியவை என்பது குறித்த புதிய கேள்விகளை எழுப்பியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )