கிளிநொச்சியில் சட்டவிரோத எரிபொருள் கையிருப்பு பறிமுதல் ; ஒருவர் கைது

கிளிநொச்சியில் சட்டவிரோத எரிபொருள் கையிருப்பு பறிமுதல் ; ஒருவர் கைது

கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு எரிபொருட்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இராமநாதபுரம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 1,220 லீற்றர் பெற்றோல் மற்றும் 530 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கிளிநொச்சி பொலிஸ் பிரிவின் மற்றொரு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தனித்த சோதனையில் மேலும் 247 லீற்றர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )