யாழில் போதைப்பொருளுடன் இளைஞர் கைது

யாழில் போதைப்பொருளுடன் இளைஞர் கைது

நல்லூர் பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயல்படும் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவினரால் 18 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து 2 கிராம் 650 மில்லிகிராம் அளவிலான ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )