
இலங்கை முதலீட்டுச் சபை பதில் தலைவராக சுலக்ஷா ஜயவர்தன நியமனம்
இலங்கை முதலீட்டுச் சபையின் (BOI) பதில் தலைவராக டாக்டர் சுலக்ஷா ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வழங்கியுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவையில் (SLAS) 23 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான சேவை புரிந்த சிறப்பு தர அதிகாரியான டாக்டர் ஜயவர்தன, பொது நிர்வாகம், கொள்கை உருவாக்கம் மற்றும் பெரிய அளவிலான திட்ட மேலாண்மை ஆகிய துறைகளில் விரிவான அனுபவம் பெற்ற மூத்த அரசாங்க அதிகாரியாகும்.
கொழும்பு 01 இல் உள்ள உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள இலங்கை முதலீட்டுச் சபையில் இன்று (08) டாக்டர் ஜயவர்தன பதவியேற்றார்.
இந்நிகழ்வில் இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா எம். வீரகோன் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

