இன்று முதல் ஏப்ரல் 18 வரை பெட்ரோல் வாங்க QRமுறைமை இல்லை

இன்று முதல் ஏப்ரல் 18 வரை பெட்ரோல் வாங்க QRமுறைமை இல்லை

புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது ‘QR’ முறைமை கருத்திற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா, சித்திரை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இருப்பினும், எரிபொருள் விநியோகத்தின் போது வாகன இலக்கத் தகட்டின் ஒற்றை மற்றும் இரட்டை (Odd/Even) எண்களைக் கருத்திற்கொள்ளும் நடைமுறை தொடர்ந்தும் பேணப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )