
ஈரானிய துறைமுகங்களை அமெரிக்கா தொடர்ந்தும் முற்றுகையிட்டுவது போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் செயல் – பதில் நடவடிக்கை எடுக்கப்படும் ஈரான் எச்சரிக்கை
அனைத்து ஈரானிய துறைமுகங்களையும் அமெரிக்க கடற்படை தொடர்ந்து முற்றுகையிட்டு வருவது போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் செயலாகும் என ஈரானின் உயர்மட்ட கூட்டு இராணுவ கட்டளைப் பிரிவான கத்தம் அல்-அன்பியா (Khatam al-Anbiya) மத்திய தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அதன் தளபதி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
“கடற்படை முற்றுகை தொடருமானால், செங்கடல் வழியாக வர்த்தகப் போக்குவரத்து இடம்பெறுவதற்கு எமது ஆயுதப் படைகள் அனுமதிக்காது.
அமெரிக்க முற்றுகை தொடர்ந்தால் பாரசீக வளைகுடா மற்றும் ஓமான் கடல் பகுதியில் எவ்வித ஏற்றுமதி அல்லது இறக்குமதி நடவடிக்கைகளுக்கும் நாம் இடமளிக்க மாட்டோம்.”
அமெரிக்கா இந்த கடற்படை முற்றுகையைத் தொடர்ந்து பேணினால், அது “போர்நிறுத்தத்தை மீறுவதற்கான ஒரு முன்னோடியாக அமையும்” என்றும் அந்தத் தளபதி மேலும் எச்சரித்துள்ளார்.

